/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தென் மண்டல ' யு - 14' செஸ் வேலம்மாள் பள்ளி சாம்பியன்
/
தென் மண்டல ' யு - 14' செஸ் வேலம்மாள் பள்ளி சாம்பியன்
தென் மண்டல ' யு - 14' செஸ் வேலம்மாள் பள்ளி சாம்பியன்
தென் மண்டல ' யு - 14' செஸ் வேலம்மாள் பள்ளி சாம்பியன்
ADDED : ஆக 04, 2025 04:33 AM

திருவள்ளூர்:சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தென் மண்டல செஸ் போட்டியில், ஆலம்பாக்கம் வேலம்மாள் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை கை ப்பற்றியது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே தென் மண்டல அளவிலான செஸ் போட்டி, கடந்த மாதம் இறுதியில் நடந்தது.
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் ந டந்த போட்டியில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மட்டுமல்லாமல் அந்தமான் நிக் கோபாரை சேர்ந்த 125 பள் ளி அணிகள் பங்கேற்றன.
பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்த நிலையில், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் அணி பிரிவில், கவின், கிஷோர் பிரஜித், நிஜேஷ், பரிதிநாராயண் அடங்கிய ஆலம்பாக்கம் வேலம்மாள் பள்ளி அணி சாம்பியன் கோப்பை வென்று அசத்தியது.
இவர்கள் அடுத்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடக்க உள்ள சி.பி.எஸ்.இ., தேசிய செஸ் சாம்பியன் ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.