/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆடிக்கிருத்திகை திருத்தணி கோவிலில் எஸ்.பி., ஆய்வு
/
ஆடிக்கிருத்திகை திருத்தணி கோவிலில் எஸ்.பி., ஆய்வு
ADDED : ஆக 08, 2025 02:21 AM
திருத்தணி,:திருத்தணி முருகன் கோவிலில், இம்மாதம் 14ம் தேதி முதல், 18 ம் தேதி வரை, ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வரும் வாகனங்கள், திருத்தணி நகருக்கு உள்ளே வராமல் தடுக்கப்பட்டுள்ளன.
மேல்திருத்தணி, அரசு போக்குவரத்து பணிமனை, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை காசிநாதபுரம் மற்றும் பைபாஸ் ஆகிய பகுதிகளில், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த இடங்களை, நேற்று மாவட்ட எஸ்.பி., விவேகானாந்த சுக்லா நேரில் பார்வையிட்டார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

