/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
/
மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
ADDED : நவ 13, 2024 08:47 PM

திருத்தணி:திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் சார்பில், 0 முதல், 18 வயதுக்குள் உள்ள மாணவர்கள் மற்றும் வருவாய் கோட்ட அளவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம், நேற்று நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடந்த முகாமில், மருத்துவர்கள் ராதிகாதேவி, வெங்கடேஷ், மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மகளிர் திட்ட உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் மதிப்பீட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.
இதுதவிர, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ரயில் மற்றும் பேருந்து பயணம், உதவித்தொகை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டன. முகாமில், 320க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 60 மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ், 50 மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்பட்டன.
மேலும், 15 குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகள் மற்றும் 80 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

