sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சிறப்பு முகாம்

/

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சிறப்பு முகாம்

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சிறப்பு முகாம்

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சிறப்பு முகாம்


ADDED : ஏப் 01, 2025 08:06 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 08:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:வீட்டு வேலை செய்து வருவோர், தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.

பொன்னேரி தொழிலாளர் நல உதவி ஆணையர் - சமூக பாதுகாப்பு திட்டம், செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வீட்டு பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு, அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல வாரியத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.

நல வாரியத்தில், புதிய உறுப்பினர் பதிவு செய்து கொள்ள, எண்: 58, சிந்துார் நகர், தடப்பெரும்பாக்கம், பொன்னேரி என்ற முகவரியில் செயல்பட்டு வரும் பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.

காலை 10:00 - மாலை 4:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். முகாமில் பங்கேற்க வருவோர், ஆதார், ரேஷன் கார்டு, பிறந்த தேதிக்கான ஆவணம், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வரவும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2797 2221, 2957 0457 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us