துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி சிறப்பு முகாம்
துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி சிறப்பு முகாம்
UPDATED : அக் 14, 2026 06:35 PM
ADDED : அக் 14, 2026 06:16 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
திருவள்ளூர் நகராட்சி சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு, அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான சிறப்பு முகாம், தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்த முகாமை, திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதயமலர், நகராட்சி கமிஷனர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இம்முகாமில் பங்கேற்ற துாய்மை பணியாளர்களுக்கு, மத்திய அரசின் ‘நமஸ்தே’ திட்டத்தின் கீழ், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும், தாட்கோ, முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பங்கேற்றன.
நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்து பெறப்பட்டன.
மேலும், முகாமில் பங்கேற்ற, 173 பேருக்கும், பொது மருத்துவ துறை சார்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், துாய்மை பணி அலுவலர் மோகன், துாய்மை பணி ஆய்வாளர் விஜய், துாய்மை பணி மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
