ADDED : நவ 20, 2024 02:11 AM

அ நிறம் | அளவு
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்வினோலினா எப்சிபா தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் லித்தியால் தேவ கிருபை முன்னிலை வகித்தார்.
முகாமில் பார்வை, செவித்திறன், மனவளர்ச்சி, உடலியக்கம், மனவளர்ச்சி ஆகிய குறைபாடு உடைய 120 பேர் பங்கேற்றனர்.
இதில், 25 பேருக்கு அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில், வட்டார கல்வி அலுவலர்கள், சேகர், ஸ்ரீலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
