/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
ADDED : நவ 15, 2024 08:43 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் வரும், ஜன.1, 2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி, தாலுகா, மாநகராட்சி அலுவலகம் மற்றும் 3,699 ஓட்டுச் சாவடிகள் அமைந்துள்ள 1,315 பள்ளிகளிலும் இப்பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதில், பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வரும் 28 வரை உரிய படிவம் பூர்த்தி செய்து அளிக்கலாம்.
இன்று 16 மற்றும் நாளை 17 ஆகிய இரண்டு நாட்களிலும், வரும் 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களிலும் அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.