தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு


ADDED : பிப் 11, 2025 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணவாள நகர், மணவாள நகர் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, உணவுடன் கூடிய மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் அடுத்த, மணவாள நகரில், கே.இ.என்.சி., மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, பிளஸ் 2 வரை மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். தற்போது, பத்தாம் வகுப்பில், 212 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த அரையாண்டு தேர்வில், தேர்வு எழுதிய மாணவர்களில், 60 பேர் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தனர்.

இதையடுத்து, பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில், மாலை நேர சிறப்பு வகுப்பு துவங்கி உள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் கூறியதாவது:

பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், கல்வி பயின்று வருகின்றனர். 2017ம் ஆண்டு முதல், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, அரையாண்டு பொதுத்தேர்வில் 60 பேர் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு தினமும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிறப்பு வகுப்பு துவக்கப்பட்டு உள்ளது.

அதில், ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் என்ற வகையில், பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு நடத்துவர். மாலை நேரத்தில், மாணவர்களுக்கு குடிநீர், டீ, பிஸ்கெட் மற்றும் கலவை சாதம் தினமும் வழங்கப்படுகிறது.

அந்த செலவுகள் அனைத்தும், பள்ளி ஆசிரியர்கள், கல்வி மேலாண்மை குழுவினர் பகிர்ந்து கொள்கின்றனர். விரைவில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்பு துவங்க திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us