தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாணவ - மாணவியருக்கு தேர்தல் சிறப்பு போட்டி

 மாணவ - மாணவியருக்கு தேர்தல் சிறப்பு போட்டி

 மாணவ - மாணவியருக்கு தேர்தல் சிறப்பு போட்டி


ADDED : மார் 24, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ - மாணவியர்களுக்கான தேர்தல் சிறப்பு போட்டி நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஏப்., 23ம் தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் பணம், பரிசு உள்ளிட்ட எந்தவித துாண்டுதல் இன்றி வாக்களிக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முதல் முறை வாக்காளர்களான, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் இளம் தலைமுறையினர்களான பள்ளி மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், மாணவ - மாணவியர் மட்டுமன்றி, அவர்களது பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, மாணவ - மாணவியருக்கு, பல்வேறு போட்டிகள் இணைய வழியில் மொபைல்போன் மற்றும் கணினி மூலம் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர் https://sveeptvlr.in/ என்ற இணையதளம் மூலம் பங்கேற்கலாம்.

வெற்றி பெறுவோறுக்கு, மொத்தம் 1.56 லட்சம் ரூபாய் பரிசு பிரித்து வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us