ADDED : மார் 13, 2026 04:44 AM
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றுவழிபட்டனர்.
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று வியாழக்கிழமை என்பதால், காலை 8:00 மணிக்கு பால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், உற்சவர் சாய்பாபா கோவில் வளாகத்தில்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை, தலையாறிதாங்கல், தாடூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளானபக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதேபோல், நகரி அருகே உள்ள சாய்பாபா கோவில்களிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும்தீபாராதனை நடந்தது.
