ADDED : மார் 26, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கலில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆரத்தியும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தின் உட்புறத்தில், உற்சவர் சாய்பாபா மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதேபோல், நகரி அருகே உள்ள சாய்பாபா கோவில்களிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
