/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சிகளில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்
/
ஊராட்சிகளில் நாளை வரி வசூல் சிறப்பு முகாம்
ADDED : டிச 26, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளிலும் வரி வசூலிக்க, நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவற்றை செலுத்த, நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த சிறப்பு வரி வசூல் முகாமை பயன்படுத்தி, அனைவரும் வரி செலுத்தி, ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

