/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு யாகம்
/
பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு யாகம்
ADDED : நவ 06, 2024 07:30 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில் அமைந்துள்ளது, அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில். இக்கோவிலின் உற்சவர் சிலை, சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, சமீபத்தில் மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த உற்சவர் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்போது கோவில் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உற்சவர் சிலைகளுக்கு இன்று காலை சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது.
அதை தொடர்ந்து, உற்சவர் சிலைகளுக்கு தினமும் பூஜைகள் ஆகம விதிப்படி நடத்தப்படும். இந்த யாகத்திற்கான யாகசாலை பூஜை நேற்று முன்தினம் மாலை துவங்கியது.
நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை 9:00 மணிக்கு யாகம் நிறைவு பெறுகிறது. அதை தொடர்ந்து, 11:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் வீதியுலா எழுந்தருளுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.