தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாணவர்களுக்கு பேச்சு போட்டி

 மாணவர்களுக்கு பேச்சு போட்டி

 மாணவர்களுக்கு பேச்சு போட்டி


ADDED : நவ 29, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தேச தலைவர்களின் கருத்துகளையும், சமூக சிந்தனைகளையும், இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அவர்களின் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மஹாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 2, 3ம் தேதிகளில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லுாரி முதல்வர்கள், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பெயரை, adtdtrl@gmail.com என்ற இ - மெயிலில், வரும் 1ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us