/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளையாட்டு போட்டி: லட்சுமி வித்யாலயா பள்ளி அசத்தல்
/
விளையாட்டு போட்டி: லட்சுமி வித்யாலயா பள்ளி அசத்தல்
விளையாட்டு போட்டி: லட்சுமி வித்யாலயா பள்ளி அசத்தல்
விளையாட்டு போட்டி: லட்சுமி வித்யாலயா பள்ளி அசத்தல்
ADDED : செப் 22, 2024 12:27 AM

ஊத்துக்கோட்டை: பள்ளிக் கல்வித்துறை சார்பில், எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையே குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
தடகளத்தில், 100 மீட்டர், 200 மீட்டர் முதல், 3,000 மீட்டர் வரையிலான போட்டிகள், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டப்பந்தயங்கள், கைப்பந்து, பூப்பந்து, இறகு பந்து, ரிங்பால், கேரம், சதுரங்கம், கோ கோ ஆகிய போட்டிகள் நடந்தன.
இதில் ஒன்றியத்தில் உள்ள, 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தடகளம், கைப்பந்து, ரிங்பால், இறகுபந்து, பூப்பந்து, சதுரங்கம், கேரம், கோ கோ ஆகிய பிரிவு போட்டிகளில் லட்சுமி வித்யாலயா மெட்ரிக்., மேனிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இப்பள்ளியைச் சேர்ந்த 151 பேர் முதலிடம், 77 பேர் இரண்டாமிடம், 13 பேர் மூன்றாமிடம் பெற்றனர்.
திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
பள்ளி தாளாளர் சுகந்தி, இயக்குநர் வேதா, பள்ளி முதல்வர் பரமசிவம், தலைமையாசிரியர் லட்சுமணன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.