தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்


ADDED : பிப் 24, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை டிவிஷன் கிரிக்கெட்

அண்ணா பல்கலை அபார வெற்றி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., ராயப்பேட்டை அணி மற்றும் அண்ணா பல்கலை அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த ஒய்.எம்.சி.ஏ., அணி, 23 ஓவர்களில் 119 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய அண்ணா பல்கலை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து, 120 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

மகளிருக்கான 'பவர் லிப்டிங்'

சென்னை அணி 'சாம்பியன்'

அம்பத்துார்: தமிழகத்தில் முதல் முறையாக நடந்த மகளிருக்கான, 'கிளாசிக் பவர் லிப்டிங்' போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். 'பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட், ஸ்குவாட்' பிரிவுகளில் பங்கேற்ற ஒவ்வொருவரும், தங்கள் உடல் வலிமையை நிரூபித்தனர். ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை அணி 'சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. வேலுார் மாவட்டம் இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.

பீனிக்ஸ் திருவண்ணாமலை

மகளிர் அணி கபடியில் 'கில்லி'

வளசரவாக்கம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்ட கலைப்பிரிவு சார்பில், மகளிர் கபடி போட்டி வளசரவாக்கம், அம்பேத்கர் திடலில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், 22 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் பீனிக்ஸ் திருவண்ணாமலை அணி 20 -- 12 என்ற கணக்கில் பாரதி திருநெல்வேலி அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிக்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us