/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்ரீகாளிகாபுரம் அரசு பள்ளி வளாகத்தின் அலங்கோலம்
/
ஸ்ரீகாளிகாபுரம் அரசு பள்ளி வளாகத்தின் அலங்கோலம்
ADDED : டிச 04, 2025 05:03 AM

ஆர்.கே.பேட்டை: அரசு பள்ளி வளாக சுற்றுச்சுவர் பணி முடியாததால், பள்ளி வளாகத்தில் குப்பை குவிந்து அலங்கோலமாக உள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர் நிறைவு செய்யப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால், பள்ளி வளாகத்திற்குள் யாரும், எப்போதும் வந்து செல்லலாம் என்ற நிலை உள்ளது.
இரவு நேரத்திலும், பள்ளி முடிந்த பின் மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்கின்றனர். இவர்கள், புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை சேதப்படுத்தி உள்ளனர்.
கலையரங்கில் உள்ள மின்விசை பொத்தான்கள் உடைக்கப்பட்டு, மின் இணைப்பு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், கலையரங்கில் மின் விபத்து நேரிடும் அபாய நிலை உள்ளது.
மேலும், பள்ளி வகுப்பறையை ஒட்டி ஏராளமான குப்பை குவிந்துள்ளது.
கழிப்பறை வளாகம் பராமரிப்பு இன்றி சீரழிந்து கிடக்கிறது.
பள்ளியின் நுழைவாயில் பகுதியில் சுற்றுச்சுவரை முழுமையாக கட்டி முடித்து நிறைவு செய்யவும், இரவு காவலரை நியமிக்கவும் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

