ADDED : அக் 06, 2025 11:12 PM

குஜராத் மாநிலத்தில் நடந்த ஆசிய அளவிலான நீச்சல் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர் பெனடிக்டன் ரோகித் தேசிய அளவில் புதிய சாதனையை படைத்தார்.
ஆசிய அக்வாடிக் மற்றும் இந்திய நீச்சல் சங்கம் சார்பில், 11வது ஆசிய அக்வாடிக் சாம்பியன்ஷிப் எனப்படும் நீர் சார் விளையாட்டு போட்டிகள், குஜராத் மாநிலத்தின் அகமதாபாதில் உள்ள வீரசாவர்க்கர் விளையாட்டு வளாக நீச்சல் குளத்தில் நடந்தது.
இதில், இந்தியா, சீனா, கத்தார், ஜப்பான் உட்பட, 12 ஆசிய நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் போட்டியிட்ட சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் பெனடிக்டன் ரோகித், ஆடவருக்கான 50 மீட் டர் 'பட்டர்பிளை' சுற்றில், போட்டி துாரத்தை 23.89 வினாடிகளில் கடந்து, இதற்கு முன் 23.96 வினாடிகளில் கடந்த, தன் சொந்த சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.
தொடர்ந்து, ஆடவருக்கான 4 x 100 மீட்டர் 'ப்ரீஸ்டைல் ரிலே' மற்றும் 4 x 100 மீட்டர் 'மெட்லி ரிலே' போட்டிகளில் வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார்.