/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.எஸ்.பி.எல்., டி - 10 கிரிக்கெட் சென்னையில் ஆக., 15ல் துவக்கம்
/
எஸ்.எஸ்.பி.எல்., டி - 10 கிரிக்கெட் சென்னையில் ஆக., 15ல் துவக்கம்
எஸ்.எஸ்.பி.எல்., டி - 10 கிரிக்கெட் சென்னையில் ஆக., 15ல் துவக்கம்
எஸ்.எஸ்.பி.எல்., டி - 10 கிரிக்கெட் சென்னையில் ஆக., 15ல் துவக்கம்
ADDED : ஜூன் 02, 2025 11:28 PM
சென்னை, எஸ்.எஸ்.பி.எல்., எனும் சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி - 10 கிரிக்கெட் தொடர், மதுரவாயலில், ஆக., 15ம் தேதி துவங்க உள்ளது.
தென்னிந்திய அளவில், முதல் முறையாக நடக்கும் இப்போட்டியில், தெருவில் விளையாடும் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நடத்தப்படுகிறது.
போட்டியில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்க உள்ளன.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ள இப்போட்டியில், டென்னிஸ் பந்தில் எட்டு ஓவர்களும், வேகமாக வீசப்படும், 'டேப்' பந்தில் இரண்டு ஓவர்களும் வீசப்படும்.
போட்டியின் அணிக்கான தேர்வு, இம்மாதம் 15ல் துவங்கி, ஜூலை 30 வரை அந்தந்த மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியிலும், 12 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. போட்டியின் மொத்த பரிசு தொகையாக, 3 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், சென்னையில் நடந்த தொடரின் அறிமுக விழாவில், லீக் தொடரின் தலைவர் ஆசிப் அலி, செயல் அதிகாரி ஆனந்த், நடிகர் ரவி மோகன் ஆகியோர் பங்கேற்று, ஐந்து அடி உயரம் கொண்ட வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தினர்.