/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிப்பதை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து; இருவர் கைது
/
குடிப்பதை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து; இருவர் கைது
குடிப்பதை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து; இருவர் கைது
குடிப்பதை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து; இருவர் கைது
ADDED : பிப் 15, 2024 11:41 PM
பொன்னேரி:பொன்னேரி என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் மோகன், 35. மொபைல்போன் கடை வைத்து உள்ளார். நேற்று காலை இவரது வீட்டின் அருகே இரண்டு வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். மோகன் தட்டிக் கேட்டு கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள், கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் மோகனை வெட்டி விட்டு தப்பினர். பலத்த காயம் அடைந்த மோகன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொன்னேரி என்.ஜி.ஓ., நகரை சேர்ந்த விக்கி, 25, தேவம்மா நகரை சேர்ந்த மகேஷ், 24, ஆகியோர் என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.