/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் 886 மாற்றுத்திறனாளிகள் மனு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் 886 மாற்றுத்திறனாளிகள் மனு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் 886 மாற்றுத்திறனாளிகள் மனு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் 886 மாற்றுத்திறனாளிகள் மனு
ADDED : நவ 04, 2025 09:43 PM
திருவள்ளூர்: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து, 886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், ஜூலை மாதம் துவங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், தற்போது வரை, 886 மனுக்கள் பெறப்பட்டன.
அதில், தலா 1.05 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று பேருக்கு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டன. மூன்று பேருக்கு, பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 29 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், இரண்டு பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
மேலும், 45 பேருக்கு காதொலி கருவி என, 82 பேருக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டத்தில், மூளை முடக்குவாதம் உள்ளிட்ட இதர குறைபாட்டால், இரண்டு கால்களும் பாதிப்படைந்த ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு, 6.30 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

