ADDED : பிப் 09, 2026 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரம்பாக்கம் - செஞ்சிபனம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், 6 கோடி ரூபாயில் நான்கு மாதங்களுக்கு முன் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களாக சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாலையில் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை சீரமைக்கப்பட்டது. இடம்: பேரம்பாக்கம்.

