/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநில அளவிலான தடகள போட்டி லட்சுமி வித்யாலயா பள்ளி தேர்வு
/
மாநில அளவிலான தடகள போட்டி லட்சுமி வித்யாலயா பள்ளி தேர்வு
மாநில அளவிலான தடகள போட்டி லட்சுமி வித்யாலயா பள்ளி தேர்வு
மாநில அளவிலான தடகள போட்டி லட்சுமி வித்யாலயா பள்ளி தேர்வு
ADDED : ஆக 24, 2025 01:57 AM

ஊத்துக்கோட்டை:ஒன்றியம் மற்றும் மண்டல அளவிளான தடகள போட்டியில் வெற்றி பெற்ற லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர். மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், திருவள்ளூரில் நடந்த குறுவட்ட அளவிலான போட்டிகளில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், லட்சிவாக்கம் லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், 61 பேர் தேர்வு பெற்றனர்.
இதை தொடர்ந்து, ஆவடியில் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் ஆறு மாணவ -மாணவியர் வெற்றி பெற்றனர்.
இதில், லட்சுமி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் சூர்யபிரகாஷ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கோ - கோ, வாலிபால், இறகு பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகளில், இப்பள்ளியை சேர்ந்த, 180க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்வெற்றி பெற்றனர்.
பள்ளி தாளாளர் சுகந்தி, நிர்வாக இயக்குநர் வேதா, முதல்வர் பரமசிவம், தலைமையாசிரியர் லட்சுமணன் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவர் சூர்யபிரகாஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் தனசேகரன், துர்கா மற்றும் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களை பாராட்டினர்.