நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: ஜன. 21--: கனகம்மாசத்திரம் அருகே, பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் செல்வி, 40. இவர், நேற்று கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், தமிழ்ச்செல்வி வைத்திருந்த கைப்பையை பிடிங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அதில், 5,000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்ற னர்.

