/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.ஐ., வீட்டில் பணம், நகை திருட்டு
/
எஸ்.ஐ., வீட்டில் பணம், நகை திருட்டு
ADDED : ஜன 15, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டையில் வசித்து வருபவர் தங்கம், 52. ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில், எஸ்.பி.சி.ஐ.டி.. சிறப்பு எஸ்.ஐ.,யாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம், வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான மாதர்பாக்கம் சென்றார்.
அன்று இரவு, மாடி வழியாக வீட்டிற்குள் இறங்கிய மர்ம நபர்கள், முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
பீரோவில் இருந்த இரண்டு ஜோடி வெள்ளி கொலுசுகள், 2 கிராம் நகை, மடிக்கணினி, 3,000 ரூபாயை திருடினர்.
மேலும், எஸ்.ஐ.,யின் போலீஸ் சீருடை மற்றும் தொப்பி ஆகியவற்றை, கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் வீசி சென்றனர்.
வழக்குப் பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.