/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புயலால் சேதமான சாலை சீரமைப்பு பணி துவங்கியது
/
புயலால் சேதமான சாலை சீரமைப்பு பணி துவங்கியது
ADDED : நவ 02, 2025 01:52 AM

திருத்தணி: வடகிழக்கு பருவமழை மற்றும் 'மோந்தா' புயலால் பெய்த கன மழையால் சேதமடைந்த நெடுஞ்சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி துவங்கியது.
வடகிழக்கு பருவ மழை மற்றும் 'மோந்தா' புயலால் கடந்த வாரம் முழுதும் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால், மாநில நெடுஞ்சாலை மற்றும் ஒன்றிய சாலைகள் சேதமடைந்தது.
தார்ச்சாலைகளில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் நெடுஞ்சாலையில் சேதம் அடைந்த பகுதிகளில் தற்காலிகமாக தார்ச்சாலை சீரமைப்பு பணிகளை நேற்று துவக்கினர்.
அந்த வகையில் திருத்தணி- பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேதமடைந்த இடத்தில் தார்ச்சாலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

