ADDED : ஏப் 06, 2026 10:34 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே வழி தவறி வந்த புள்ளி மான் ஒன்று, தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தது.
கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில், புள்ளி மான் ஒன்று வழி தவறி வந்தது. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த வாகனங்கள் ஏறி இறங்கியதில், மானின் உடல் சிதைந்தது. தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி வனத்துறையினர், மானின் உடலை மீட்டு, நேமளூர் காப்பு காட்டில் அடக்கம் செய்தனர்.
