ADDED : டிச 28, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, அகூர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு நெடுஞ்சாலையோரம், 70க்கும் மேற்பட்டோர், வாரந்தோறும் வியாழக்கிழமை மாலையில்,  காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.
இது, இருவழிச் சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாரச்சந்தை இடத்தை மாற்ற வேண்டும், என, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

