ADDED : ஆக 15, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: மின்சாரம் பாய்ந்து பிளஸ் 1 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கற்குழாய் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் மகன் சீனிவாசன், 16. அரசு பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், மடிக்கணினியை சார்ஜ் செய்து விட்டு, அருகில் படுத்திருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்கசிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
