ADDED : ஆக 21, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
வயலுார், ஆக. 22–
கடம்பத்துார் ஒன்றியம், வயலுார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி கீதா, 35. இவருக்கு ரூபேஷ், 18, மோனிஷ், 14, என இரு மகன்கள் உள்ளனர்.
வயலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மோனிஷ், நேற்று உணவு இடைவேளையின் போது, சத்துணவு கூடத்தின் கூரையில் விழுந்த பொருளை எடுக்க, சக மாணவர்களுடன் ஏறிச் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியே சென்ற மின் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த மோனிஷ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த மப்பேடு போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
