/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசிரியர் இடமாற்றம் மாணவர்கள் போராட்டம்
/
ஆசிரியர் இடமாற்றம் மாணவர்கள் போராட்டம்
ADDED : நவ 27, 2024 01:23 AM

பொன்னேரி:பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக, ஜெயராஜ் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
அவர் திடீரென, பொன்னேரி அடுத்த பெரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேற முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பள்ளி ஆசிரியர்கள் பேச்சு நடத்திய போது, 'தங்களுக்கு நல்ல முறையில் விளையாட்டு பயிற்சி வழங்கி வந்த ஆசிரியரை இடமாற்றம் செய்தது ஏன்? எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதையடுத்து மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பினர்.