தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி :மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி

சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி :மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி

சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி :மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி


UPDATED : அக் 10, 2026 08:00 PM

ADDED : அக் 10, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 08:00 PM ADDED : அக் 10, 2026 07:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மடுகூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் நுழைவாயிலை ஒட்டியுள்ள சுற்றுச்சுவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இதுவரை சேதமடைந்த சுற்றுச்சுவர் முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை.

இதனால், பள்ளி செயல்படும் நேரங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து சுற்றித் திரிகின்றன. இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அச்சம் எழுந்துள்ளது.

மேலும், இரவு நேரங்களிலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் வெளிநபர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்லும் சூழல் நிலவுகிறது. இதனால், மாணவர்களின் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

எனவே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை முழுமையாகச் சீரமைக்கவும், பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் மற்றும் வெளிநபர்கள் அனுமதியின்றி நுழைவதைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மடுகூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us