/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவியரும் ஆசிரியராக மாறுங்கள்: அமைச்சர் 'அட்வைஸ்'
/
மாணவியரும் ஆசிரியராக மாறுங்கள்: அமைச்சர் 'அட்வைஸ்'
மாணவியரும் ஆசிரியராக மாறுங்கள்: அமைச்சர் 'அட்வைஸ்'
மாணவியரும் ஆசிரியராக மாறுங்கள்: அமைச்சர் 'அட்வைஸ்'
ADDED : நவ 10, 2024 02:25 AM

திருத்தணி:திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார். பின் வகுப்பறைகளுக்கு சென்று மாணவியரை பாடபுத்தகத்தை வாசிக்க, அமைச்சர் கவனித்தார்.
பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்களை நன்கு கவனித்து படிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால், நீங்கள் நினைத்த பாடப் பிரிவுகளில் இலவசமாக சேர்ந்து படிக்கலாம் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தெலுங்கு மொழி படிக்கும் மாணவியிடம் பாடபுத்தகத்தில் உள்ளதை படிக்க சொல்லி, அதை கவனித்தார். அமைச்சர் மகேஷ், வகுப்பறையில் மாணவிகளிடம், ஆசிரியர் பாடங்களை நடத்தும் போது சில மாணவியர் உடனே புரிந்துக் கொள்ளவார்கள். பல மாணவிகளுக்கு புரிதலில் காலதாமதமாகும்.
எனவே, நன்றாக படிக்கும் மாணவிகள் சகமாணவிகளுக்கு பாடங்களை சொல்லி கொடுக்கும் ஆசிரியராக மாற வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது திருத்தணி தி.மு.க., -- எம்.எல்.ஏ., சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை கலாமணி ஆகியோர் உடனிருந்தார்.