/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்தில் தொங்கியப்படி பயணம் மாணவர்கள் - கண்டக்டர் வாக்குவாதம்
/
பேருந்தில் தொங்கியப்படி பயணம் மாணவர்கள் - கண்டக்டர் வாக்குவாதம்
பேருந்தில் தொங்கியப்படி பயணம் மாணவர்கள் - கண்டக்டர் வாக்குவாதம்
பேருந்தில் தொங்கியப்படி பயணம் மாணவர்கள் - கண்டக்டர் வாக்குவாதம்
ADDED : அக் 09, 2025 03:06 AM

திருத்தணி, திருத்தணி அரசு கல்லுாரி மாணவர்கள், பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதனால், கண்டக்டர் பேருந்தை நிறுத்த சொன்னதால், மாணவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உள்ள மேதினிபுரத்தில், திருத்தணி அரசு கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
திருத்தணியில் இருந்து, 4 கி.மீ.,யில் கல்லுாரி அமைந்துள்ளதால், பெரும்பாலான மாணவர்கள் பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர். திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து, அரசு கல்லுாரிக்கு குறைந்தளவில் பேருந்துக்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நேற்று காலை அரசு பேருந்தில், கல்லுாரி மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால், மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியவாறும், மேற்கூரையின் மீது ஏறியும் பயணியத்தனர். இதனால், ஓட்டுனர் பேருந்தை பாதியில் நிறுத்தியதால் மாணவர்களுக்கும், கண்டக்டருக்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, மாற்று பேருந்து வந்ததும், மாணவர்கள் அதில் ஏறி கல்லுாரிக்கு சென்றனர்.
எனவே, மாணவர்கள் நலன் கருதி போக்குவரத்து நிர்வாகம், காலை நேரத்தில் கல்லுாரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.