/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேலஞ்சேரி அரசு பள்ளி நுழைவு பகுதியில் ஏரியின் உபரிநீர் செல்வதால் மாணவர்கள் அவதி

ADDED : பிப் 21, 2025 02:06 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமத்தில், அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், வேலஞ்சேரி கிராமம் மற்றும் காலனி, சத்திரஞ்ஜெயபுரம், வேலஞ்சேரி மோட்டூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து, மொத்தம் 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
வேலஞ்சேரி ஏரி, தற்போது நிரம்பி, உபரிநீர் மதகு வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இந்த தண்ணீர் அரசு உயர்நிலைப் பள்ளி செல்லும் நுழைவாயல் வழியாக கால்வாய் வாயிலாக செல்கிறது.
இந்நிலையில், நீர்வளத் துறையினர் உபரிநீர் செல்லும் கால்வாயை முறையாக பராமரிக்காததால், தற்போது, கால்வாய் புதைந்துள்ளன. இதனால், கால்வாயில் செல்லும் தண்ணீர் பள்ளி வாசலில் தேங்கி வெளியே செல்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தண்ணீரில் இறங்கி தான் பள்ளிக்குள் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் கால்வாயை சீரமைத்து, பள்ளிக்கு முன் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என, அப்பகுதியினர்  கோரிக்கை வைத்துள்ளனர்.