/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி நுழை வாயிலில் குப்பை தொற்று அபாயத்தில் மாணவர்கள்
/
அரசு பள்ளி நுழை வாயிலில் குப்பை தொற்று அபாயத்தில் மாணவர்கள்
அரசு பள்ளி நுழை வாயிலில் குப்பை தொற்று அபாயத்தில் மாணவர்கள்
அரசு பள்ளி நுழை வாயிலில் குப்பை தொற்று அபாயத்தில் மாணவர்கள்
ADDED : ஏப் 11, 2025 02:36 AM

மணவாளநகர்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளது கே.ஈ.என்.சி. நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி நுழைவு வாயில் எதிரே கழிவுநீர் கால்வாயில் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து சாலையில் வைக்கின்றனர். இவ்வாறு வைக்கப்படும் குப்பையை முறையாக எடுப்பதில்லை.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் அரசு பள்ளி எதிரே சேகரமாகும் குப்பையை மாணவ, மாணவியரின் நலன் கருதி தினமும் அகற்ற வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளர்.