/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை
/
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2025 07:03 PM
மீஞ்சூர்:மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த பகுதிவாசிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 320 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இங்கு எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளியை தொடர, 5.கி.மீ., தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அங்குள்ள ரயில்வே தண்டவாளங்களை கடந்து, பள்ளி செல்ல வேண்டிய சூழலில் அச்சம் காரணமாக, பெற்றோர் உயர் கல்வியை தொடர அனுமதிப்பதில்லை.
இதனால் பெரும்பாலான மாணவர்கள் உயர்நிலை கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றலுடன் இருக்கின்றனர்.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க இப்பள்ளியை தரம் உயர்த்தி, உயர்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று மீஞ்சூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் தொகுதி காங்., எம்.பி., சசிகாந்த் செந்திலிடம், மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநலசங்கத்தினர், முறையிட்டனர்.
அவர் நேரிடையாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அவரிடம், 'எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் உயர்நிலை கல்வி தொடராமல், படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். நீண்ட துாரத்தில் உயர்நிலை பள்ளிகள் இருப்பதால், மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கிறது' என தெரிவித்தனா்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி., உறுதியளித்தார்.