/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயணியர் நிழற்குடை இல்லாமல் மாணவ - மாணவியர் சிரமம்
/
பயணியர் நிழற்குடை இல்லாமல் மாணவ - மாணவியர் சிரமம்
ADDED : ஜூலை 10, 2025 02:34 AM

நேமம்:நேமம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை இல்லாததால், மாணவ - மாணவியர் சிரமமடைந்து வருகின்றனர்.
வெள்ளவேடு அடுத்துள்ளது, நேமம் கிராமம். இங்குள்ள ஊத்துக்கோட்டை - திருமழிசை நெடுஞ்சாலை வழியே தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ ---- மாணவியர் என, தினமும், 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை இல்லாததால், அவர்கள் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, மாணவ - - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.