/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடிந்து விழுந்து வரும் சுற்றுச்சுவர் அச்சத்தில் மாணவ - மாணவியர்
/
இடிந்து விழுந்து வரும் சுற்றுச்சுவர் அச்சத்தில் மாணவ - மாணவியர்
இடிந்து விழுந்து வரும் சுற்றுச்சுவர் அச்சத்தில் மாணவ - மாணவியர்
இடிந்து விழுந்து வரும் சுற்றுச்சுவர் அச்சத்தில் மாணவ - மாணவியர்
ADDED : பிப் 23, 2026 06:05 AM

ஆர்.கே.பேட்டை: அரசு பள்ளிகளுக்கு இடையே அமைந்துள்ள குளத்தின் சுற்றுச்சுவர் தொடர்ந்து இடிந்து வருவதால், மாணவ - மாணவியர், பெற்றோர் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீரமங்கலத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் அருகே குளம் அமைந்துள்ளது. இந்த குளக்கரையில் அரசு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இங்கு, மொத்தம் 300 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். குளத்தை சுற்றிலும் வகுப்பறை கட்டடங்கள் அமைந்துள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, 10 ஆண்டுகளுக்கு முன் குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. சுற்றுச்சுவர் கட்டப்பட்ட பின், குளத்தை முறையாக பராமரிப்பதும் இல்லை. தற்போது குளத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. மேலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
குளத்தில் விஷ பூச்சிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, குளத்தை துார்வாரி சீரமைக்கவும், குளத்தை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கவும், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

