/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விஷேச நாட்களில் திருப்பி விடப்படும் பேருந்துகளால் மாணவர்கள் அவதி
/
விஷேச நாட்களில் திருப்பி விடப்படும் பேருந்துகளால் மாணவர்கள் அவதி
விஷேச நாட்களில் திருப்பி விடப்படும் பேருந்துகளால் மாணவர்கள் அவதி
விஷேச நாட்களில் திருப்பி விடப்படும் பேருந்துகளால் மாணவர்கள் அவதி
ADDED : ஏப் 02, 2025 10:12 PM
கும்மிடிப்பூண்டி:பொன்னேரியில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, கும்மிடிப்பூண்டி பகுதிக்கு 'டி' சர்வீஸ் பேருந்துகளான, தடம் எண்: 32, 35, 38, 39, 42 இயக்கப்படுகின்றன. அதேபோல், தடம் எண்: 90, 90ஏ, 90பி, 112பி, 113 கிராஸ், 115 ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து சேவையை பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெண் தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட் ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை போன்ற விஷேச நாட்களில், இந்த பேருந்துகள் அனைத்தும், மேல்மலையனுார், திருவண்ணாமலை உள்ளிட்ட கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகளாக திருப்பி விடப்படுகின்றன.
இதனால், அச்சமயங்களில் கும்மிடிப்பூண்டி பகுதி முழுதும் அரசு போக்குவரத்து சேவையின்றி கிராமவாசிகள் தவித்து வருகின்றனர். குறிப்பாக, தற்போது பள்ளி மாணவர்கள் தேர்வு நடந்து வருவதால், அரசு போக்குவரத்து பேருந்துகள் இன்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி பகுதி கிராமவாசிகளின் நலன் கருதி, விஷேச நாட்களில் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

