/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி முன் குப்பை மாணவர்கள் அவதி
/
அரசு பள்ளி முன் குப்பை மாணவர்கள் அவதி
ADDED : நவ 03, 2025 01:10 AM

திருத்தணி: கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி நுழைவு பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி- சோளிங்கர் நெடுஞ்சாலை கே.ஜி. கண்டிகையில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளி நெடுஞ் சாலையோரம் அமைந்துள்ளன. பள்ளியில், 900க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
கே.ஜி.கண்டிகை பஜாரில் மளிகை, காய்கறி, பழங்கள், பூ மாலை உள்பட, அனைத்து வகையான, 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கடைகளின் கழிவுகளை அரசு பள்ளி நுழைவு வாயில் பகுதியில் கொட்டு கின்றனர்.
இதை முறையாக ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அரசு பள்ளி அருகே குப்பை கொட்டக் கூடாது என பலமுறை பள்ளி நிர்வாகம் சார்பில் கடைக்காரர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து ம் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளியின் முன் குப்பை கொட்டுவது தடுத்து, ஊராட்சி நிர்வாகம் முறையாக கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

