/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்களை ஏற்ற மறுக்கும் அரசு பேருந்துகளால் அவதி
/
மாணவர்களை ஏற்ற மறுக்கும் அரசு பேருந்துகளால் அவதி
ADDED : ஜூலை 23, 2025 02:03 AM

கீழ்மணம்பேடு:அரசு மாநகர பேருந்துகள் மாணவர்களை ஏற்றாமல் செல்வதால், பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பூந்தமல்லி ஒன்றியத்தில் கீழ்மணம்பேடு ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், கல்விக்காக திருமழிசை மற்றும் பூந்தமல்லி சென்று வருகின்றனர்.
இப்பகுதி வழியே இயக்கப்படும் அரசு பேருந்துகளை நம்பி, மாணவ - மாணவியர் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், காலை நேரங்களில் மாணவ - மாணவியர் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால், இவ்வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், நிறுத்தத்திற்கு முன்பாகவே பேருந்தை நிறுத்தி பயணியரை இறக்கிவிட்டு செல்கின்றனர். பள்ளி மாணவர்களை ஏற்ற மறுக்கின்றனர்.
இதனால், மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பஸ் பாஸ் இருந்தும், மாணவ - மாணவியர் ஷேர் ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.
எனவே, அரசு பேருந்துகள் முறையாக நிறுத்தத்தில் நின்று, மாணவர்களை ஏற்றி செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.