ADDED : அக் 29, 2026 10:38 PM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: ‘ஸ்டூடியோ’ பூட்டை உடைத்து, கேமரா லென்ஸ், சார்ஜர் மற்றும் 5,000 ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியபாளையம் அடுத்த மடவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிகணேஷ், 36. இவர், திருக்கண்டலம் பஜார் பகுதியில், ‘ஸ்டுடியோ’ வைத்துள்ளார்.
நேற்று (அக்.,28) இரவு, வழக்கம் போல் கடையை மூடிவிட்டுச் சென்றவர், இன்று (அக்.,29) காலை 9:00 மணிக்கு கடையை திறக்க சென்றார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, கேமரா லென்ஸ், சார்ஜர், மெமரி கார்டு, 5 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடுபோனது தெரிந்தது.
இதுகுறித்து, டில்லிகணேஷ், பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
