ADDED : டிச 07, 2024 01:46 AM
திருவள்ளூர், வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் விசை கருவி வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் விசைக்களை எடுக்கும் கருவி மானிய விலையில் வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் இயலும்.
சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம்; இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரியில் செயல்படும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.