/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத துணை மின்நிலையம் தேவம்பட்டில் விபத்து ஏற்படும் அபாயம்

ADDED : ஜூலை 07, 2025 11:22 PM

பொன்னேரி, துணை மின்நிலையத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாப்பு வசதி இல்லாததால், கால்நடைகள் மற்றும் வெளிநபர்களால் மின் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொன்னேரி அடுத்த தேவம்பட்டு பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து அகரம், குடிநெல்வாயல், பூங்குளம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் நடைபெறுகிறது.
இந்த துணை மின்நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ளது. துணை மின்நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை.
கால்நடைகள் மின்மாற்றிகள் உள்ள பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்கின்றன. இரவு நேரங்களில் மர்மநபர்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். போதை ஆசாமிகளின் விரும்பத்தகாத செயல்களாலும், கால்நடைகள் மின் சாதனங்களில் சிக்கும் போதும், மின் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இங்கு பணியாளர்கள் யாரும் இருப்பதில்லை. பழுதுகளின் போது மட்டும் பணியாளர்கள் வந்து செல்கின்றனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், துணை மின்நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து, பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.