/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுக்கூடமான சுரங்கப்பாதை பள்ளி மாணவர்கள் அச்சம்
/
மதுக்கூடமான சுரங்கப்பாதை பள்ளி மாணவர்கள் அச்சம்
ADDED : ஜூலை 25, 2025 01:32 AM

பள்ளிப்பட்டு:ஆறுவழி சாலை சுரங்கப்பாதையில் இருட்டான பகுதியில் 'குடி'மகன்கள் மது அருந்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக ஆந்திர மாநிலம் சித்துார் வரை ஆறுவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், பள்ளிப்பட்டு அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் உள் ளே இருள் சூழ்ந்துள்ள பகுதியில், குடிமகன்கள் பகல் நேரத்திலேயே மது அருந்துகின்றனர். சுரங்கப்பாதையில் இருள் படர்ந்துள்ளதால் இந்த வழியாக கடந்து செல்லும் வாகனங்களால், குடிமகன்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், இந்த வழியாக பயணிக்கும் பள்ளி மாணவர்கள் முகம் சுழித்தபடி கடந்து செல்கின்றனர்.
மேலும், மேலப்பூடி, சொரக்காய்பேட்டையில் உள்ள அம்மன் கோவில்களுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். பக்தர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, சுரங்கப்பாதையில் மது அருந்துபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.