/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தென்னை சாகுபடிக்கு சீமை அகத்தி உரம்
/
தென்னை சாகுபடிக்கு சீமை அகத்தி உரம்
ADDED : அக் 06, 2024 12:56 AM
திருவள்ளூர், திருவள்ளூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஒரு தென்னை மரத்திற்கு ஆண்டு தோறும் 0.34 கிலோ நைட்ரஜன் சத்து தேவைப்படுகிறது.
கரிம உரம் குறிப்பாக பசுந்தாள் உரம் நைட்ரஜனை வழங்கும் என்பதால், தென்னை மரங்களுக்கு பசுந்தாள் உரம் இடுதல் மிகவும் முக்கியமானது.
தென்னந்தோப்பு வரப்புகளில் 'கிளைரிசிடியா' எனப்படும் சீமை அகத்தி எளிதில் வளரும்.
அனைத்து வகையான மண், மலை சரிவு, மணற்பாங்கான கடற்களை சமவெளிகளிலும், தாழ்வான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட களிமண் பகுதிகளிலும் நன்றாக வளரும்.
இதை பயிரிட்ட மூன்று ஆண்டுகளில் தென்னை மரங்களுக்கு உரமிடுவதற்கு போதுமான பசுந்தளை இலைகள் கிடைக்கும். 700 மீட்டர் நீளமுள்ள 'கிளைரிசிடியா' வளர்க்கும் போது, ஆண்டு ஒன்றுக்கு இரண்டரை ஏக்கருக்கு 300 கிலோ தழைச்சத்து கிடைக்கும்.
கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இதிலில் இருந்து வெளிப்பட்டு, அமிலத்தன்மை உள்ள மண் வகைகளில் அதன் தன்மையை குறைக்கிறது. இந்த இலைகள் மிக விரைவில் சிதைந்து, மண்ணில் உரமாக மாறிவிடும்.
தென்னை சாகுபடியில் 'கிளைரிசிடியா'வை சேர்ப்பதன் வாயிலாக, உரச்செலவை கணிசமாக குறைக்கலாம். மண் வளம் அதிகரித்து, நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அதிகளவில் பெருக்கமடையும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.