ADDED : ஏப் 26, 2025 02:16 AM

அ நிறம் | அளவு
பொன்னேரி:பொன்னேரி அருகே உள்ள திருவேங்கிடபுரம் பாலமுருகன் நகரில், 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெருவில் நேற்று மாலை, மின்கம்பம் ஒன்று திடீரென உடைந்து விழுந்தது.
அதை தொடர்ந்து அடுத்தடுத்து இருந்த இரண்டு மின்கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்தன. மின் ஒயர்களும் அறுந்தன. தகவல்அறிந்த பொன்னேரி மின்வாரியத்தினர் அங்கு சென்று, மின்இணைப்பை துண்டித்தனர்.
தொடர்ந்து, உடைந்து விழுந்து மின்கம்பங்களையும், அறுந்த மின்ஒயர்களையும் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
பாலமுருகன் நகரில் உள்ள மின்கம்பங்களில் மேலும் சில சேதம் அடைந்து இருப்பதாகவும், உரிய ஆய்வு மேற்கொண்டு மின்வாரியத்தினர் அவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
