/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற இணைப்பு சாலைகளால் அவதி
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற இணைப்பு சாலைகளால் அவதி
ADDED : டிச 26, 2024 03:25 AM

கும்மிடிப்பூண்டி :  சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம், சிப்காட், கன்னியம்மன் கோவில், பெத்திக்குப்பம், எளாவூர், கவரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகள், தொடர் மழைக்கு சேதமானது. மழைநீர் தேங்கிய இடங்களில் சாலை முற்றிலும் பழுதாகி பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் கடக்கும்போது, அதில் சிக்க நேரிடுகிறது. கார், ஆட்டோ போன்ற இலகு ரக வாகனங்களின் அடிப்பகுதி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதிகளை கடந்து சென்று வருகின்றனர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக சேதமான இணைப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

