/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாலை நேரங்கள் திறக்கப்படாத கால்நடை மருந்தகங்களால் அவதி
/
மாலை நேரங்கள் திறக்கப்படாத கால்நடை மருந்தகங்களால் அவதி
மாலை நேரங்கள் திறக்கப்படாத கால்நடை மருந்தகங்களால் அவதி
மாலை நேரங்கள் திறக்கப்படாத கால்நடை மருந்தகங்களால் அவதி
ADDED : மே 14, 2025 06:21 PM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய நான்கு ஒன்றியங்களில், 23 கால்நடை மருந்தகங்கள், ஐந்து கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
கால்நடை மருந்தகங்கள், காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 3:00 - 5:00 மணி வரையும் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் போடப்படுக்கிறது. கடந்த சில மாதங்களாக பெரும்பாலான கால்நடை மருந்தகங்கள், காலை நேரத்தில் மட்டுமே திறந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாலை நேரத்தில் திறப்பதில்லை.
இதனால், கால்நடை வளர்க்கும் விவசாயிகள், மாலை நேரத்தில் தங்களது கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், தனியார் கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், கணிசமான தொகை செலவு செய்ய வேண்டியுள்ளது.
மேலும், சில நேரங்களில் குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால், கால்நடைகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், இனிவரும் காலங்களில் மாலை நேரத்திலும் கால்நடை மருந்தகங்கள் திறந்து, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.